நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்து புதுமுகத்தினர்களை சினிமாவில் அறிமுகம் செய்து வருகிறார். சிவா நடத்தும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம் ‘கனா’. சிவாவின் நண்பரும், பிரபல காமெடி நடிகருமான அருண்ராஜா காமாராஜை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வசூல் வேட்டை செய்தது. கடந்த வருடத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் இது இருந்தது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவா தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டாவது படத்தை தயாரிக்க இருப்பதாகவும். பிரபல யூ ட்யூப் சேனல் பிளாக் ஷீப் குழுதான் அந்த படத்தில் பணிபுரிய உள்ளதாகவும், ரியோ ராஜ் ஹீரோ மற்றும் விக்னேஷ் காந்த் நடிக்கிறார் என்று அறிவிப்பு விட்டிருந்தார். தற்போது அந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
தற்போது இணையத்தில் ட்ரைலரும் வெளியாகியுள்ளது.