Advertisment

பாலியல் புகார்; உடனடியாக செய்தியளர்களை சந்தித்த நிவின் பாலி

nivin pauly pres meet regards his midbehavioured complaint hema committee report

Advertisment

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்குத் தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகை ஸ்ரீலேகா மித்ரா இயக்குநர் ரஞ்சித் மீதும் நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் குற்றம் சாட்டினார். நடிகை மினுமுனீர் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித், சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் குற்றத்தை மறுத்தனர். இதில் ரஞ்சித், சித்திக் தங்கள் வகிக்கும் திரைத்துறை தொடர்பான பதவிலிருந்தும் விலகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடிகர்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பை கலைத்து, தலைவர் மோகன்லால் உள்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் பதவி விலகினர். இதனிடையே நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகைகளின் வாக்கு மூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நடிகர்கள் மீது பாலியல் புகார் எழுந்து வரும் நிலையில் நிவின் பாலி மீதும் பாலியல் புகார் எழுந்தது. எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் எர்ணாகுளம் ஊன்னுக்கல் காவல் நிலையத்தில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நிவின் பாலி இந்த பாலியல் புகாரை மறுத்து அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டார். அதில் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாலியல் புகார் எழுந்தது தொடர்பாக உடனடியாக செய்தியாளர்களை சந்தித்தார் நிவின் பாலி. அவர் பேசுகையில், “என் மீது புகார் கூறிய அந்த பெண் யாரென்றே எனக்கு தெரியாது. நான் அவரைப் பார்த்தது கூட கிடையாது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்த செய்தி என் குடும்பத்தை பாதிக்கிறது. நான் தவறு செய்யவில்லை என்பதில் 100 சதவிகிதம் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் இந்த செய்தியாளர்களை சந்திப்பை உடனடியாக நடத்துகிறேன். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சட்டப்படி கையாண்டு, புகாருக்கு எதிராக போராடுவேன். உண்மையை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன்” என்றார்.

Kerala mollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe