Advertisment

பிரபல நடிகரின் உதவியாளர் பலி!

Nivin Pauly

மலையாளத் திரையுலகின் ஒப்பனைக்கலைஞரான ஷபு, பிரபல நடிகரான நிவின் பாலியின் உதவியாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர், எதிர்வரவிற்கும் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, கடந்த ஞாயிறன்று தனது வீட்டில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். அப்போது, அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தில் நட்சத்திரம் கட்ட முயற்சித்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

Advertisment

தலையின் பின்பக்கத்தில் ஏற்பட்ட அடி காரணமாக சுயநினைவை இழந்த அவரை, குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மலையாளத் திரையுலகினர் பலரும் ஷபு மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe