Nivin Pauly Mahaveeryar Teaser goes viral

Advertisment

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின் பாலி இயக்குநர் அப்ரித் சைனி இயக்கும் "மகாவீர்யார்"படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில்ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர்.இயக்குநர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் எம். முகுந்தனின் கதையை தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.இப்படத்திற்கு இஷான் சாப்ரா இசையமைக்க, நிவின் பாலி மற்றும் எஸ்.பி சம்னாஸ்இருவரும் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது.டைம் டிராவல், ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சுற்றி நகரும் இப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில்பலரின் கவனத்தை பெற்று வருகிறது. மேலும் இந்த டீசர் யூடியூப் தளத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.