nivetha

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது ஜெயம்ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வந்த அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். அவர் இந்த பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில், சில தவறான மெசேஜ்களினால் மனம் பாதிக்கப்பட்ட நிவேதா, திடீரென்று தனது டுவிட்டர் கணக்கை ரத்து செய்து விலகிவிட்டார். இது அவரது ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இனி இன்ஸ்டாகிராமில் மட்டுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.