Skip to main content

“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருக்தாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 

nivetha thomas

 

 

இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தர்பார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

தர்பார் படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பதால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ், “உலகிற்கு தெரிய வேண்டும், இப்போவும் எப்போவும் ஒரே ஒரு ஆதித்யா அருணாச்சலம்தான், ஆமாம்! அவர்தான் என்னுடைய அப்பா” என்று தார்பார் படத்தில் ரஜினிகாந்தின் பெயர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

முருகதாஸின் மகன் பெயர் ஆதித்யா என்றும், முருகதாஸின் தந்தை பெயர் அருணாச்சலம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரஜினி, நயன்தாரா ஆகியோர் பக்கத்து மாநிலமாக இருந்தாலும்...”- தயாரிப்பாளர் கே.ராஜன் காட்டம்

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

எம்.பி.ராஜன் மலைச்சாமி இயக்கி, நடித்துள்ள படம் 'பூதமங்கலம் போஸ்ட்'. முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

k rajan

 

 

அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் யோகிபாபுவுக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசியவர் தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் பிரச்சனையை எடுத்துக்கொண்டு இயக்குனர் முருகதாஸையும் ரஜினிகாந்தையும் கடுமையாக விமர்சித்தார்.

அதில், “பெரிய நடிகர்கள், இயக்குனர்களைக் கேட்கிறேன். 100 கோடி, 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்களே, அதை எந்தப் படத்தில் முதலீடு செய்கிறீர்கள்? 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்குகிறேன். நீங்கள் எந்தப் படத்தில் முதலீடு செய்கிறீர்கள்? எங்களுடைய தமிழ்நாட்டு பணம் எங்கே செல்கிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் கைக்கு வரும் பணம் மீண்டும் இந்த தமிழ் திரையுலகிற்குதான் வருகிறது.

தர்பாரை லைகா நிறுவனம் தயாரித்தது.ஆனால், இந்தப் படத்தின் ஷுட்டிங் முழுவதும் மும்பையில் நடைபெற்றது. அங்கு ஷூட்டிங் நடந்தால், தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு யார் வேலை கொடுப்பது?. அந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், யோகி பாபு தவிர்த்து மீதம் நடித்த அனைவருமே வடஇந்தியர்கள் தான். அப்படி படம் எடுத்தால் எப்படி ஓடும். 

ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் பக்கத்து மாநிலங்களாக இருந்தாலும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். தமிழ் படங்களில் 75% படப்பிடிப்பை இங்கு நடத்தினால் என்ன? 25% வேறு எங்கு வேண்டுமானாலும் எடுங்கள். ஆந்திராவில் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது. ஒரு படம் நஷ்டமானால் விநியோகஸ்தர்களை அழைத்து பணத்தை பிரித்துக் கொடுக்கிறார்கள். இங்கு நஷ்டமாகிவிட்டு என்று இயக்குனர் வீட்டுக்குப் போனால் காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். முழுக்க மும்பையில் எடுக்கப்பட்ட படத்தை தமிழ் ரசிகன் 300 ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்க்கிறான்” என்றார்.

 

 

Next Story

விநியோகிஸ்தர்களை காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார்- டி.ஆர்.ராஜேந்தர் கேள்வி!!  

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

படத்தினை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என திரைப்பட விநியோகிஸ்தர் சங்க தலைவர் டி.ஆர்.ராஜேந்தர் மறைமுகமாக நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்துள்ளார். 

 

darbar issue-TR Rajender Question !!

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. 

இந்நிலையில் இந்த படம் போதுமான பணத்தை வசூலீட்டவில்லை என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இழப்பீட்டுக்காக அவர்கள் இயக்குனர் முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தபோது அவர் அனுமதிக்கவில்லை, அதேபோல ரஜினிகாந்தும் நேரில் பார்த்து பேச அனுமதிக்கவில்லை என்று விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான புகார் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், நடிகரும், இயக்குனருமான டி.ஆர்.ராஜேந்தரிடன் செல்ல,  இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த டி.ஆர் ராஜேந்தர், விநியோகிஸ்தர்கள் மீது காவல்நிலையத்தில் முருகதாஸ் புகார் அளித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இயக்குனர் முருகதாஸ் தாமாக முன்வந்து வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என கேள்வி எழுப்பி நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார்.