லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

nivetha

Advertisment

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையுடன் இப்படம் உருவாகவுள்ள நிலையில் இப்படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க பிரபல மலையாள நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமலஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.