Advertisment

ஆபாசமாக பேசியவருக்கு அட்வைஸ் செய்த நடிகை 

'நவீன சரஸ்வதி சபதம்' படம் மூலம் நாயகியாக நடித்து, பின்னர் போராளி, ஜில்லா, பாபநாசம் படங்கள் மூலம் பிரபலமான நடிகை நிவேதா தாமஸ் தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்து வரும் நிலையில் நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

Advertisment

nivetha

அப்போது சில ரசிகர்கள் திருமணம் குறித்தும், ஆண் நண்பர்கள் குறித்தும், கன்னித் தன்மை குறித்தும் மோசமான கேள்விகளை எழுப்பினர். இதற்கு கடுப்பான நிவேதா தாமஸ் நிவேதா தாமஸ் அவர்களுக்கு சமூக இன்ஸ்ட்டாகிராமிலேயே அட்வைஸ் செய்தார். அதில்... "எனக்காக நேரம் ஒதுக்கி பேசியவர்களுக்கு நன்றி. உங்கள் நகைச்சுவையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சில மோசமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நிராகரித்து விட்டேன். நீங்கள் சக மனிதருடன் உரையாடுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். மரியாதையாகவும் கண்ணியமாகவும் பேசுங்கள்” என அறிவுரை கூறினார்.

Advertisment

darbar Nivetha Thomas
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe