Skip to main content

ஆபாசமாக பேசியவருக்கு அட்வைஸ் செய்த நடிகை 

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

'நவீன சரஸ்வதி சபதம்' படம் மூலம் நாயகியாக நடித்து, பின்னர் போராளி, ஜில்லா, பாபநாசம் படங்கள் மூலம் பிரபலமான நடிகை நிவேதா தாமஸ் தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்து வரும் நிலையில் நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

 

nivetha

 

 

அப்போது சில ரசிகர்கள் திருமணம் குறித்தும், ஆண் நண்பர்கள் குறித்தும், கன்னித் தன்மை குறித்தும் மோசமான கேள்விகளை எழுப்பினர். இதற்கு கடுப்பான நிவேதா தாமஸ்  நிவேதா தாமஸ் அவர்களுக்கு சமூக இன்ஸ்ட்டாகிராமிலேயே அட்வைஸ் செய்தார். அதில்... "எனக்காக நேரம் ஒதுக்கி பேசியவர்களுக்கு நன்றி. உங்கள் நகைச்சுவையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சில மோசமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நிராகரித்து விட்டேன். நீங்கள் சக மனிதருடன் உரையாடுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். மரியாதையாகவும் கண்ணியமாகவும் பேசுங்கள்” என அறிவுரை கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஜினி பட நடிகை!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

bnfxnxcnc

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால், அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். 

 

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’, ரஜினியுடன் ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நிவேதா தாமஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

Next Story

“ரஜினி, நயன்தாரா ஆகியோர் பக்கத்து மாநிலமாக இருந்தாலும்...”- தயாரிப்பாளர் கே.ராஜன் காட்டம்

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

எம்.பி.ராஜன் மலைச்சாமி இயக்கி, நடித்துள்ள படம் 'பூதமங்கலம் போஸ்ட்'. முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

k rajan

 

 

அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் யோகிபாபுவுக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசியவர் தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் பிரச்சனையை எடுத்துக்கொண்டு இயக்குனர் முருகதாஸையும் ரஜினிகாந்தையும் கடுமையாக விமர்சித்தார்.

அதில், “பெரிய நடிகர்கள், இயக்குனர்களைக் கேட்கிறேன். 100 கோடி, 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்களே, அதை எந்தப் படத்தில் முதலீடு செய்கிறீர்கள்? 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்குகிறேன். நீங்கள் எந்தப் படத்தில் முதலீடு செய்கிறீர்கள்? எங்களுடைய தமிழ்நாட்டு பணம் எங்கே செல்கிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் கைக்கு வரும் பணம் மீண்டும் இந்த தமிழ் திரையுலகிற்குதான் வருகிறது.

தர்பாரை லைகா நிறுவனம் தயாரித்தது.ஆனால், இந்தப் படத்தின் ஷுட்டிங் முழுவதும் மும்பையில் நடைபெற்றது. அங்கு ஷூட்டிங் நடந்தால், தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு யார் வேலை கொடுப்பது?. அந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், யோகி பாபு தவிர்த்து மீதம் நடித்த அனைவருமே வடஇந்தியர்கள் தான். அப்படி படம் எடுத்தால் எப்படி ஓடும். 

ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் பக்கத்து மாநிலங்களாக இருந்தாலும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். தமிழ் படங்களில் 75% படப்பிடிப்பை இங்கு நடத்தினால் என்ன? 25% வேறு எங்கு வேண்டுமானாலும் எடுங்கள். ஆந்திராவில் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது. ஒரு படம் நஷ்டமானால் விநியோகஸ்தர்களை அழைத்து பணத்தை பிரித்துக் கொடுக்கிறார்கள். இங்கு நஷ்டமாகிவிட்டு என்று இயக்குனர் வீட்டுக்குப் போனால் காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். முழுக்க மும்பையில் எடுக்கப்பட்ட படத்தை தமிழ் ரசிகன் 300 ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்க்கிறான்” என்றார்.