ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்துஅவரது நடிப்பில் டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்கள்வெளியாகின. மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை.
இதனிடையே தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து அங்கு பல படங்களில்நடித்து வருகிறார். அந்தவகையில், அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'தஸ்கா தம்கி'. இப்படத்தை விஸ்வாக் சென் இயக்கி நடித்துள்ளார். மேலும், அவரே தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தைப்ரொமோஷன் செய்வதற்கு வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளனர் விஸ்வாக் சென் மற்றும் நிவேதா பெத்துராஜ். தெலங்கானாவில் உள்ள ஒரு திரையரங்கில் டிக்கெட் கவுண்டரில் உட்கார்ந்து ரசிகர்களுக்கு டிக்கெட் விற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை விஸ்வாக் சென் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.