'இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார்' - நிவேதா பெத்துராஜ்

nivetha pethuraj

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் படம் 'திமிரு புடிச்சவன்'. விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்துள்ள இப்படத்தை கணேஷா இயக்கியுள்ளார். வரும் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது சந்திப்பில் கலந்துகொண்ட நிவேதா பெத்துராஜ் இப்படம் குறித்து பேசியபோது....

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"கதையை சொல்லும்போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்ட வேண்டும் என்று சொன்னார். அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன், திடீரென ஒருநாள் மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். டப்பிங்கில் படத்தை பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. படம் முழுக்க புதுசு புதுசாக நிறைய செய்ய சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இது இருக்கும்" என்றார்.

thimirupidichavan nivethapethuraj
இதையும் படியுங்கள்
Subscribe