Skip to main content

'எனக்கு அது பெரும் உதவியாக இருந்தது' - நிவேதா பெத்துராஜ் பெருமிதம் 

Published on 06/06/2018 | Edited on 08/06/2018
nivetha pethuraj


நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது பார்ட்டி, டிக் டிக் டிக், திமிருப்பிடிச்சவன், ஜெகஜால கில்லாடி ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.  இதில்  பார்ட்டி, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் இவர் சமீபத்தில் தான் கற்ற தற்காப்பு கலையை பற்றி பேசும்போது...

 

 


"இதுநாள்வரைக்கும் எந்தத் தவறான வி‌ஷயங்களுக்காகவும் சினிமாவில் யாரும் என்னை அணுகியதில்லை. எனக்கு தற்காப்புக் கலை தெரியும். தாய்லாந்தில் இது தொடர்பாக இரண்டு ஆண்டுகள் படித்து இருக்கிறேன். குத்துச் சண்டை நன்றாக தெரியும். அதனால் என் உடல் எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும். தற்காப்புக் கலை, குத்துச்சண்டை. இதெல்லாம் கற்றுக்கொண்டதால் மனக்கட்டுப்பாடு எனக்கு அதிகமாக இருக்கும். நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை 'டிக் டிக் டிக்' படத்தில் நடிக்கும்போது எனக்கு பெரும் உதவியாக இருந்தது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

"அந்த அரக்கனுக்கு எதிராக முறையான நடவடிக்கை" - பி.எஸ்.பி.பி ஆசிரியர் குறித்து நிவேதா பெத்துராஜ்

Published on 24/05/2021 | Edited on 24/05/2021
fgegewgs

 

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருவதால், முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதுதொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டுகளும் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆசிரியரின் இந்த செயல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஆசிரியரின் இந்த செயலுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவு செய்துள்ளார். அதில்...

 

"பி.எஸ்.பி.பி பள்ளி சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளியை வெளி உலகுக்குச் சுட்டிக்காட்டிய சிறுமிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அந்த அரக்கனுக்கு எதிராக முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.