தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். திரைத்துறையில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை.
திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸ் மற்றும் பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வமிக்கவராக இருக்கிறார். இதனிடையே தனது வருங்கால கணவரை கடந்த மாதம் சமூக வலைதளப் பக்கம் மூலமாக அறிமுகப்படுத்தியிருந்தார். ரஜித் இப்ரான் என்பவரை காதலித்து வரும் அவர், விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் வன்முறை காட்சிகள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும், கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம் தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை...” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும், கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம்தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை...
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) September 26, 2025
Open any platform for news &…