Nivetha Pethuraj

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமனானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் வெளியாகின. மேலும், அவர் நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்டி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் ரிலீஸிற்குதயாராகவுள்ளன.

Advertisment

தமிழைவிட தெலுங்கில் பிசியாக நடித்துவரும் நிவேதா பெத்துராஜ், தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா நடிப்பில் ‘விராட பருவம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நக்ஸலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment