style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
'டிக் டிக் டிக்' படத்திற்கு பிறகு நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் அடுத்ததாக 'பார்ட்டி' படம் வெளியாகவுள்ள நிலையில் இவர் தற்போது விஜய் ஆண்டனி ஜோடியாக 'திமிரு பிடிச்சவன்' படத்திலும், பிரபுதேவா ஜோடியாக 'பொன் மாணிக்கவேல்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'பொன் மாணிக்கவேல்' படம் குறித்து தற்போது வாய் திறந்துள்ள நிவேதா.... "நான் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில், இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு பிரபுதேவாவின் மனைவி கதாபாத்திரம். பிரபுதேவாவுடன் இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்"என்றார். ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தை ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் மற்றும் நேமிசந்த் ஜபக் தயாரிக்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});