nivetha pethuraj

விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது நிவேதா பெத்துராஜ் 'மீடூ' குறித்து பேசியபோது....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"பெண்களிடம் யாராவது ஒருவன் தவறாக நடக்க முயன்றால், அந்த இடத்திலேயே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ரொம்ப நாட்கள் கழித்து அந்த தவறை வெளிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் பாதிக்கப்படும். ‘மீடூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு பார்ட்டிக்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என் மீது தான். நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்" என்றார்.