bvffnd

தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் பிசி நடிகையாக வலம்வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் இவர் கைவசம் தற்போது 'பார்ட்டி', 'பொன் மாணிக்கவேல்' போன்ற படங்கள் உள்ள நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், நேற்று (23.06.2021) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்விகி செயலி மூலம் பெருங்குடியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

vdshfdshd

மேலும், இதற்கு ஆதாரமாக உணவில் கரப்பான்பூச்சி இருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும், குறிப்பிட்ட அந்த உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது தற்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment