Published on 26/07/2018 | Edited on 26/07/2018

'டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் அடுத்தாக 'பார்ட்டி' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இதையடுத்து அவர் தற்போது ஒரு தெலுங்கு படத்திலும், தமிழில் பிரபுதேவா ஜோடியாக 'பொன் மாணிக்கவேல்' படத்திலும் மற்றும் விஜய் ஆண்டனியுடன் 'திமிரு பிடிச்சவன்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' படத்தில் நடிப்பது குறித்து பேசியபோது.... "இந்த படத்தில் முதல்முறையாக போலீசாக நடிக்கிறேன். சில சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளேன். விஜய் ஆண்டனி விரும்பியதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும்" என்றார்.