/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/174_25.jpg)
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை. இதையடுத்து ஏ.எல் விஜய் இயக்கத்தில் கடந்த வருடம்வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் அவர், ஸ்போர்ட்சிலும் அவ்வப்போது ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட், பேட்மிண்டன் போட்டி நடத்தியது. அதில் மதுரை அணிக்காக இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)