ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை. இதையடுத்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் போலீஸாரிடம் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நிவேதா பெத்துராஜ் காரை போலீஸார் சோதனை செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது உள்ளே இருந்த நிவேதா பெத்துராஜிடம் கார் டிக்கியைத்திறக்க சொல்லி கேட்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நிவேதா பெத்துராஜ், போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது வீடியோ எடுக்கும் நபரை ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் எனக் கேமராவை நிறுத்துகிறார். இத்துடன் வீடியோ முடிகிறது.
இந்த வீடியோவில் போலீஸாரும், நிவேதா பெத்துராஜும் தெலுங்கில் பேசுகின்றனர். இந்த சூழலில் இந்த வீடியோ, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படத்தின் புரோமோஷன் வீடியோ என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.