nithya menon talks about confounded nuisance

Advertisment

மலையாளியான நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சித்தார்த்தின் 180 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் வெப்பம், உருமி, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6d1d7ee6-6c2f-4396-af5a-c40acd479459" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_18.jpg" />

இதனிடையே நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை காட்டமான வார்த்தைகளால் அவர் மறுத்திருந்தார். மேலும் இந்த செய்திக்கு காரணமாக சந்தோஷ் வர்க்கி என்ற இளைஞர் தான் உண்மையிலேயே நித்யா மேனனை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நித்யா மேனன், "அந்த இளைஞர் எனக்கு நிறைய பிரச்சனை கொடுக்கிறார். அவர் பேசியது வைரலானதை அடுத்து, தற்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளார். கடந்த 6 வருடங்களாகவே அவர் எனக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். பல்வேறு புதிய எண்களிலிருந்து எனக்கு போன் செய்து தொல்லை கொடுத்து வருகிறார். அப்படி இதுவரை அவரிடமிருந்து எனக்கு வந்த 30 தொலைபேசி எண்களை பிளாக் செய்துளேன். அப்படியும் என்னை விடவில்லை. என் அப்பா, அம்மாவிற்கும் போன் செய்து தொல்லை கொடுத்து வருகிறார். பொதுவாக அவர்கள் யாரிடமும் கோபமாக பேசமாட்டார்கள். ஆனால் அவர்களையும் அந்த இளைஞர் கோபப்படுத்தியுள்ளார். எல்லோரும் போலீசில் புகார் கொடுக்கச் சொன்னார்கள், நான் தான் அவர் ஏதோ சிக்கலில் இருக்கிறார் என்று மன்னித்து விட்டுவிட்டேன்" என்று கூறியுள்ளார்.