Advertisment

தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது? வெளுத்து வாங்கிய நித்யா மேனன்!

nithya menon expalin his marriage rumours

Advertisment

மலையாளியான நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சித்தார்த்தின் 180 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் வெப்பம், உருமி, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்திலும்கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே நடிகை நித்யா மேனனுக்கும், மலையாள நடிகர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்பரவியது.

இந்நிலையில் இதனை நடிகை நித்யா மேனன் மறுத்துள்ளார். விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 19 (1)(A) என்ற படத்தின்பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நித்யா மேனன், “என் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளில்உண்மையில்லை. ஒரு செய்தியை வெளியிடும் போது சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்து நன்கறிந்து வெளியிட வேண்டும். அதை விட்டுவிட்டு தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது" என வெளுத்து வாங்கியுள்ளார்.

actor vijay sethupathi Nithya menon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe