style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்சார் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸுக்கும், இணையங்களில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் மாதவன் ஹிந்தியில் நடித்த இணைய தொடரான 'பிரீத்' தொடர் இணையதளத்தில் வெளியாகி ஹிட்டடித்தது. இதையடுத்து அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராகவுள்ளது. முதல் சீசனை இயக்கிய மயங் அகர்வால் இந்த சீசனையும் இயக்குகிறார். மாதவனுக்குப் பதிலாக அபிஷேக் பச்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.