முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் விஜய் ஆகியோர் இயக்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில் இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தயாரித்து, இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். இப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ளபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இக்கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து இயக்குனர் பிரியதர்ஷினி பேசியபோது.... "இந்த படத்தில் ஜெயலலிதாவின் இளவயது நடிகை வாழ்க்கை முதல் மருத்துவமனை இறுதி நாட்கள் வரை அனைத்தும் படமாக்கப்பட உள்ளன. அவரது சினிமா வாழ்க்கையை காட்டுவதற்காக அவர் நடித்த காலத்தில் கோடம்பாகத்தில் இருந்த சினிமா ஸ்டூடியோக்களை அப்படியே செட் போட்டு உருவாக்க இருக்கிறோம்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சினிமா முதல் அரசியல் வரை அவருடன் பயணித்தவர்கள் கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய நடிகர்கள், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு, அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும். அந்தக்களத்தை அவர் எப்படி மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளைத் தகர்த்துக்காட்டி, என்றும் வழிகாட்டியாய் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியாக வாழ்ந்தார் என்ற வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது பெருமையாக இருக்கிறது. ஒரு பெண்ணாக, வரலாறு கண்ட மாபெரும் தலைவியின் வரலாற்றை இயக்குவதற்கான இந்த வாய்ப்பை கடமையாகவே உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்க திட்ட மிட்டுள்ளோம். மேலும் இப்படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எல்லோருமே பயந்தனர். ஆனால் நித்யா மேனன் மட்டும்தான் துணிச்சலுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் வரலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்" என்றார்.