ஜெய் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்ப்பது ஏன்? - உண்மையை உடைத்த நிதின் சத்யா

jai

ஜெய் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'ஜருகண்டி'. வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இதில் ஜெய்க்கு ஜோடியாக புதுமுகம் ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், இளவரசு, போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை குறித்து தயாரிப்பாளர் மற்றும் நடிகர் நிதின் சத்யா பேசுகையில்....

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இயக்குனர் பிச்சுமணியை 'சென்னை 28' படத்தில் இருந்தே எனக்கு தெரியும். மங்காத்தா, சரோஜா என வெங்கட் பிரபு படங்களில் அவர் கோ டைரக்டராக செய்த வேலை பிடித்துப் போனது. படத்திற்கு ஏன் தெலுங்கு டைட்டில் வைத்தீர்கள் என கேட்கிறார்கள். இவரின் முதல் படதிற்கு இந்த டைட்டிலை வைத்திருந்தார். இதற்கிடையே இந்த புதிய படத்தின் கதை ரெடியானதும், படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கின்ற காரணத்தால் படத்திற்கு பொருத்தமானவேகம், ரன், ஸ்பீடு என்றடைட்டிலை வைக்கலாம் என்று பார்த்தால் இதெல்லாம் ஏற்கனவே வந்துவிட்ட காரணத்தால்வெங்கட் பிரபு பரிந்துரையின் படி இவரின் முதல் பட டைட்டிலான 'ஜருகண்டி'யை இப்படத்திற்கு வைத்து விட்டோம். மேலும் படத்தை உண்மையாகவே சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம். ஜெய் உட்பட அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஜெய் பொதுவாக எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொல்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார். அதனால் நான் அவரை பிரோமஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை. மேலும் அவருக்கு பத்திரிக்கையாளர்களை கண்டால் ஒருவித பயம் வந்துவிடுகிறது. அது என்ன, ஏன் என்று எனக்கும் தெரியவில்லை. படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். மேலும் சிங்கம் 3 படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.

jai jarugandi
இதையும் படியுங்கள்
Subscribe