bvdsgsd

வைபவ், வெங்கட் பிரபு மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்து, நித்தின் சத்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 'லாக்கப்' படம் ஜி5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதுகுறித்து நடிகர் நித்தின் சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"தமிழ் சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் வணக்கம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் எனது தயாரிப்பில் உருவான 'லாக்கப்' திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி. மேலும் இந்த படம் மக்களிடம் சேர உதவிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், திரைப்பட ஆர்வலர்கள் என எல்லோருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

ஒட்டுமொத்த லாக்கப் படக்குழுவுக்கும், என் இணை தயாரிப்பாளர் பிளேஸ் கண்ணுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் எல்லோருடைய அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் 'லாக்கப்' படம் உங்களிடம் நல்ல பெயர் பெற்றதற்கு முக்கியக் காரணம். டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் அவர்களுக்கும், ஆதரவு தந்த ஜீ5 தளத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சினிமாவின் மீதான எனது ஆசை மிகப்பெரியது. திரைத்துறையில் பல விதமான வேலைகளில் நான் பணியாற்றி இருக்கிறேன். பதினைந்து வருடங்களுக்கும் மேலான இந்த பயணத்தில் பல விஷயங்களை கற்று இருக்கிறேன். இந்த துறை எனக்கு தந்த விஷயங்களுக்கு நான் நன்றி செய்ய இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன்.

Advertisment

எனது தயாரிப்பு நிறுவனமான ஸ்வேத்தின் இரண்டாவது வெளியீடான 'லாக்கப்' படத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்குடன் கூடிய தரமான படங்களை தருவேன் என்றும், புதிய திறமைகளை ஸ்வேத்தின் மூலமாக ஊக்குவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். 'லாக்கப்' திரைப்படத்தை பெரிய வெற்றி பெற செய்த அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

என்றும் அன்புடன்,

நித்தின் சத்யா" என கூறியுள்ளார்.