பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். த்ரிஷ்யம், ஃபோர்ஸ், ராக்கி ஹேண்ட்ஸம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான டோம்பிவாலி ஃபாஸ்ட் என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை மாதவனை வைத்து தமிழில் எவனோ ஒருவன் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிஷிகாந்த். சமூக ஊடகங்களில் பலரும் நிஷிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.