அனுஷ்கா ஷெட்டி மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் 'சைலன்ஸ்'. இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழில்'நிசப்தம்' என்ற பெயரிலும் வெளியாகிறது.

Advertisment

anushka

இப்படம் இந்த மாதம் 2-ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா ஊரடங்களால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவ்வாறு வெளியிடுவதனால் நடிகை அனுஷ்காவுக்கும் தயாரிப்பு குழுவுக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்ததுள்ளது. இதற்கு விளக்கம் வகையில், "படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை, எங்கள் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும், நல்லது கெட்டது என அனைத்திலும் எங்களுக்கு ஆதரவாக தூண்களைப் போல் நிற்கிறார்கள். முக்கியமாக அனுஷ்கா ஷெட்டி அவர்கள்.

Advertisment

http://onelink.to/nknapp

அடிப்படையற்ற எந்தப் புரளிகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். எதாவது பெரிய முன்னேற்றம் இருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளது.