nirav shah tweet about thunivu

Advertisment

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின்'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ஒரு புதிய அப்டேட் வருகிற 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'துணிவு' படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, "சில காட்சிகளை இப்ப தான் பார்த்தேன். நிறைய பட்டாசு வாங்கிக்கோங்க... நிறைய..." என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிற நிலையில், இப்போது நிரவ் ஷாவின் பதிவு அதனை இன்னும் அதிகரித்துள்ளது.

Advertisment

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா அஜித்தின் 'கிரீடம்', 'பில்லா', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.