'சித்தா', 'ஜிகர்தண்டாடபுள்எக்ஸ்', உள்ளிட்ட படங்களில்நடித்துப்பிரபலமானவர்நிமிஷாசஜயன். அவர் இப்போது ‘என்ன விலை’ என்ற புதியதமிழ்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம்த்ரில்லர்ஜானரில்ஃபேமிலிடிராமாஉருவாகிறது.திலீஷ்போத்தன்இயக்கத்தில்,பகத்பாசில் நடிப்பில் விமர்சன மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான 'தொண்டிமுதலும்த்ரிக்சாக்ஷியும்' திரைப்படத்தின்திரைக்கதையாசிரியர்சஜீவ்பழூர்இந்தப் படத்தை இயக்குகிறார். சாம்சிஎஸ்இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில், கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இதுவரை செய்யாத வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதாபாத்திரமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் உறுதிப்படுத்துகின்றனர். இந்தப் படத்தின் முதல்ஷெட்யூல்ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவதுஷெட்யூல்எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தஷெட்யூல்கோகுலம்ஸ்டுடியோவில்8 நாட்கள் படமாக்கப்படும். அதைத் தொடர்ந்து, 12 நாட்கள் சென்னை மற்றும்ராமோஜிஃபிலிம்சிட்டியில் படமாக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும்.