நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நமிதா பிரமோத் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது.

“பொது இடங்களுக்கு செல்லும்போது தொல்லைகளை சந்திக்கிறேன். சிறுவர்களும், பெண்களும் என்னை ஒரு சகோதரிபோல் நினைத்து அன்பாக பழகுகிறார்கள். என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றனர். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆனால் சிலர் ரசிகர்கள் போர்வையில் என் அருகில் வந்து செல்பி எடுப்பதுபோல் உடம்பை தொட்டு தவறாக நடக்கின்றனர்.
தோளிலும் கை வைக்கிறார்கள். இது எனக்கு எரிச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் பர்தா அணிந்து கொண்டு செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் பட நடிகை சாரா அலி கானுடன் நேரில் செல்பி எடுத்த ரசிகர் ஒருவர் அத்துமீறி அவரை முத்தமிட முயன்றது குறிப்பிடத்தக்கது.