/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/21_79.jpg)
தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசி காந்த் இயக்கும் 'டெஸ்ட்', நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cda0bb67-a03d-4c8e-88d0-3d179b776b18_4.jpg)
இதில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. இப்படத்தை 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்க முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லிஉள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைக்கிறார். 'அன்னபூரணி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் டைட்டில் ரோலில் நயன்தாரா நடித்துள்ளார். டிசம்பர் 1ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இப்படம் குறித்து நிலேஷ் கிருஷ்ணா கூறுகையில், “சாப்பாடு இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. அதனால் சாப்பாடு போடுபவர்கள் கடவுள் போல. அதை கருத்தில் கொண்டு தான் படத்திற்கு அன்னபூரணி என தலைப்பு வைத்தோம். இந்த கதை எழுதினதே நயன்தாராவிற்காகத் தான். படத்தை அவர் முழுவதுமாக பார்த்தார். க்ளைமேக்ஸ் காட்சி ரொம்ப பிடித்ததாக சொன்னார்” என்றார்.
Follow Us