Advertisment

மீண்டும் ரஜினி படத்தில் நீலாம்பரி ; வெளியான புது தகவல்

Nilambari in Rajini again; New information released

விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ரஜினியின் 169' படத்தை இயக்கவுள்ளார் நெல்சன் திலீப் குமார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

Advertisment

இந்நிலையில் 'ரஜினியின் 169' படத்தை பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு வெளியான 'படையப்பா' படத்தில் ரஜினிக்கு வில்லியாக இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்திரம் மக்கள் மனதில் இன்றும் இடம் பிடித்து வருகிறது. 'ரஜினியின் 169' படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

rajini 169 sun pictures. ramya krishnan ACTOR RAJINI KANTH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe