/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Nikki-Galrani-South-Actress.jpg)
சமீபத்தில் வெளியான 'கலகலப்பு 2' வை அடுத்து நடிகை நிக்கி கல்ராணி தற்போது ஜீவாவுடன் 'கீ', மற்றும் பிரபுதேவாவுடன் 'சார்லி சாப்ளின் 2' வில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தன் பெரும்பாலான தோல்வி படங்கள் குறித்து மனம் திறந்து நிக்கி பேசும்போது... "வெற்றி பெறும் என்று நம்பியே நூறு சதவீத உழைப்பைக் கொடுக்கிறோம். அதற்கு சரியான பலன் இல்லாதபோது சோகமாகத்தான் இருக்கும். நாடு முழுக்க வருடத்துக்கு ஐநூறுக்கு மேற்பட்ட படங்கள் வருகிறது. அதில் நமது படமும் ஒன்று. நல்ல இடத்தை பிடிக்கவேண்டும் என்று தான் ஓடுகிறோம். ஆனால் சமயத்தில் அது தவறிவிடும். அதற்காக மனதை தளர விடுவதில்லை. அடுத்த படம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் பணியைத் தொடங்கிடுவேன்" என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)