Advertisment

ஆதி-நிக்கி கல்ராணிக்கு திருமணம் எப்போது? - வெளியான புதிய தகவல்

nikki galrani

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2009-ல் வெளியான 'ஈரம்' படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. 'யாகாவாராயினும் நாகாக்க', மரகத நாணயம்', படங்களில் இணைந்து நடித்த நடிகை நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. அந்நிகழ்ச்சி சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் குடும்ப உறவினர்கள், மிக நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளார்கள் என கூறப்படுகிறது. இதனையொட்டி நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதி பகிர்ந்தார். அவை சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisment

இந்நிலையில், ஆதி, நிக்கி கல்ராணி திருமணம் சென்னையில் மே மாதம் நடக்கவிருப்பதாகவும், நிச்சயதார்த்தம் போல் சாதாரணமாக இல்லாமல் மிக பிரம்மாண்டமாக இதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை விரைவில் அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

nikki galrani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe