Advertisment

நடனப்புயலை மேரேஜ் செய்யத்துடிக்கும் நடிகை 

irumbu thirai.jpeg

prabhudeva

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் 'கொமரம் புலி' என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நிகிஷா படேல் தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 'பாண்டி முனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தையொட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிகிஷா படேல் பேசியபோது...."தனக்கு இந்தி படங்களில் வாய்ப்பு அதிகமாக வருகிறது இருந்தும் தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகருக்கு ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் தொடர்ந்து இங்கையே நடிப்பேன். மேலும் நடிகர் பிரபுதேவாவை எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என்றார் அதிரடியாக. 45 வயதாகும் பிரபுதேவா ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் கொண்டிருந்ததனால் அவரது மனைவியிடமும் விவாகரத்து பெற்றார். இதையடுத்து நயன்தாரா உடனான காதலும் திடீரென்று முறிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment
prabhudeva mercury karthiksubburaj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe