Nikhila Vimal

Advertisment

பிரபல தமிழ் நடிகையான நிகிலா விமலின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார்.

சசிகுமார் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் நிகிலா விமல். வணிக ரீதியாக படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்றாலும், அப்படத்தில் இடம்பெற்றிருந்த 'உன்னைப் போல ஒருத்தர நான் பார்த்ததில்லை' எனும் பாடல் மூலம் நிகிலா விமலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, கிடாரி, தம்பி ஆகிய படங்களிலும் நடித்தார்.

Advertisment

இந்த நிலையில், கண்ணூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்த நிகிலா விமலின் தந்தை பவித்ரன் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து, திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கலும், நிகிலா விமலிற்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.