Nikhil Siddharth and Anupama Parameswaran in 'Karthikeya 2' teaser released

‘கார்த்திகேயா 2’, விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க அனுபம் கெர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான 'கார்த்திகேயா' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகம் ஆகும். இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் ‘கார்த்திகேயா 2’ படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர்நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் புராண மற்றும் வரலாற்றுக் கதைகளை மையப்படுத்தி பேசுவது போல் வெளியாகியுள்ளது இந்த டீசர். மேலும் இப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment