nikil

பிரபல தெலுங்கு நடிகரான நிகில் சித்தார்த்திற்கு இன்று காலை அவருடைய காதலி பல்லவி வர்மாவுடன் திருமணம் நடைபெற்றது.

Advertisment

Advertisment

ஹேப்பி டேஸ், கிராக் பார்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த். இவருக்கும் இவருடைய காதலி பல்லவி வர்மாவிற்கும் கடந்த ஃபிப்ரவரி மாதம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஹைதரபாத்திலுள்ள தனது பண்ணை வீட்டில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரை மட்டும் அழைத்திருந்தார்.

இன்று அதிகாலை நடைபெற்ற தனது திருமணத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். திருமணம் நடைபெற்ற ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.