எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான புலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிகிஷா படேல். பின்னர் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசியபோது...

Advertisment

nikesha patel

"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பிரகாஷுடன் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனிநபராகவும் திரைநட்சத்திரமாகவும் நேசிக்கத்தக்க நபர். அவருடைய காமெடி டைமிங் எல்லாம் ஜோர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

எழில் சாருடைய படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். எழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன். எத்தனையோ கதைகள் பற்றி ஆலோசித்திருந்தாலும் இந்த கேரக்டர் எனக்குப் பொருந்திப் போயிற்று. எழில் சார் மிகவும் அமைதியான நபர். கடினமாக உழைக்கும் இயக்குநரும் கூட. இந்த கதை மீது எழில் சார் சிறப்பான பார்வை கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்களில் அவருடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்றார்.