/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_489.jpg)
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் நடித்தவர் நிஹாரிகா. கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவியின் சகோதரரின் மகள் ஆவார். இவருக்கும் தொழிலதிபர் சைதன்யா என்பவருக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரின் புகைப்படத்தை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது குடும்ப நிகழ்வான நடிகர் வருண்தேஜ் நிச்சயதார்த்தத்தில்தனியாக கலந்து கொண்டார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில்சைதன்யா மற்றும் நிஹாரிகா இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நிஹாரிகா வெளியிட்டுள்ள பதிவில், "சைதன்யாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. புதிய வாழ்வைஏற்க தேவையான தனிமை வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)