ஊரடங்கில் தமிழ் கற்கும் நிதி அகர்வால்! 

nidhi agarwal

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இதனிடையே கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. பல பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே புதிதாக எதையாவது கற்றுக்கொண்டு அதைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜெயம் ரவியுடன் 'பூமி' படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை நிதி அகர்வால், வீட்டில் தமிழ் கற்றுவருவதைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வந்தவர், தற்போது தமிழில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

nidhi agarwal
இதையும் படியுங்கள்
Subscribe