இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கின்றார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். இவர் ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

Advertisment

nidhi agarwal

கடந்த 2017ஆம் ஆண்டு முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் தெலுங்கில் சவ்யாசாச்சி, மிஸ்டர், மஜ்னு போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். ஆனால், இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் ஹிட் அடிக்கவில்லை. இதனால் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது.

இந்நிலையில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இஸ்மார்ட் சங்கர் என்னும் படத்தில் நித்தி அகர்வாலை நடிக்க வைத்தார். இந்த படம் வேறு லெவலில் ஹிட் அடித்தது. ரசிகர்களுக்கும் நித்தி அகர்வால் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. நித்தி அகர்வாலுக்கும் பாராட்டுகளும் கிடைத்தன. இந்த படத்தின் வெற்றிதான் தமிழில் ஜெயம் ரவியுடன் அறிமுகமாகும் அளவிற்கு அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது.

Advertisment

இந்நிலையில் வெற்றியை கொண்டாடும் விதமாக நிதி அகர்வால் சொந்தமாக ‘போர்ச்சே’ என்ற சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.1 கோடி ஆகும். அந்த காரை ஓட்டி செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.