Advertisment

சென்னையில் பிரபல நடிகைக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

Nidhhi Agerwal

‘முன்னா மைக்கேல்’ என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை நிதி அகர்வால், மிகக் குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர், தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த 'பூமி', சிம்புவுடன் இணைந்து நடித்த 'ஈஸ்வரன்' என இரு திரைப்படங்களும் பொங்கல் தினத்தையொட்டி வெளியாகின. இரு படங்களிலும் நடிகை நிதி அகர்வாலின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டதோடு, கணிசமான தமிழ் ரசிகர் கூட்டத்தையும்அவருக்கு உருவாக்கியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், காதலர் தினம் நேற்று (14.02.2021) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த நடிகை நிதி அகர்வாலின் ரசிகர்கள், அவருக்குச் சிலை வைத்து பாலாபிஷேகம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

nidhi agarwal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe