Advertisment

'நூறு நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில்...' - பிரியங்கா சோப்ரா உருக்கம்

'In NICU for over a hundred days ...' - Priyanka Chopra

தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் எனும் பாப் பாடகரைக் திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளதாகஅறிவித்தார்கள்.

Advertisment

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், "கடந்த சில மாதங்களாக நாங்கள் பயணித்த கடினமான நேரங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. கடந்த நூறு நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இறுதியாக வீட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்தன்மை வாய்ந்தது. எங்கள் குழந்தை இறுதியாக வீடு திரும்பியதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிபுணர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளது" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

nick jonas Priyanka chopra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe