என்.ஜி.கே படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

surya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நடிகர் சூர்யா- இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர். பிரபுதான் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம் என்றும் இதை குறிப்பிடலாம்.

Advertisment

கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கிய என்.ஜி.கேவின் படபிடிப்பு, 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் என்.ஜி.கே படப்பிடிப்பு பல காரணங்களால் தள்ளிப் போனதால் வருகிற மே 31ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த காலதாமதம் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என்று ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.