/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Deq_LOgVMAA5RX2.jpg)
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி தான் இசையமைத்து கொண்டிருக்கும் '90எம்.எல்' படத்தின் இசையை துரிதமாக இம்மாத இறுதிக்குள் முடித்துவிடுகிறார் என்றும் இதை தொடர்ந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பிறகு விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை தொடர்ந்து தானே இயக்கி நடிக்கும் படம், கவுதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயா 2' படம், மற்றும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் புதிய படம் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய தகவலால் சிம்பு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)