Advertisment

'டிசி'-யின் அடுத்த படைப்பு ; ட்ரெண்டிங்கில் 'ப்ளாக் ஆடம்' ட்ரைலர்

The next creation of ‘DC’; 'Black Adam' trailer on Trending

ஹாலிவுட்டில் வரும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் மவுசு அதிகம். குறிப்பாக 'டிசி' மற்றும் 'மார்வெல் ஸ்டுடியோஸ்' நிறுவனங்களின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் 'டிசி' நிறுவனத்தின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் படம் 'ப்ளாக் ஆடம்'. இந்த படத்தில் 'ப்ளாக் ஆடம்' கதாபாத்திரத்தில் டுவைன் ஜான்சன் நடித்துள்ளார். பியர்ஸ் ப்ரோஸ்னன், ஆல்டிஸ் ஹாட்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பியூ ஃபிளின், டுவைன் ஜான்சன் உள்ளிட்ட நான்கு பேர் தயாரிக்கும் இப்படத்தை ஜாம் கோலெட்-செர்ரா இயக்குகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

Advertisment

இந்நிலையில் 'ப்ளாக் ஆடம்' படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி யூ-ட்யூப் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

Black Adam dc comics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe