Skip to main content

'டிசி'-யின் அடுத்த படைப்பு ; ட்ரெண்டிங்கில் 'ப்ளாக் ஆடம்' ட்ரைலர்

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

The next creation of ‘DC’; 'Black Adam' trailer on Trending

 

ஹாலிவுட்டில் வரும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் மவுசு அதிகம். குறிப்பாக 'டிசி' மற்றும் 'மார்வெல் ஸ்டுடியோஸ்' நிறுவனங்களின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் 'டிசி' நிறுவனத்தின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் படம் 'ப்ளாக் ஆடம்'. இந்த படத்தில் 'ப்ளாக் ஆடம்' கதாபாத்திரத்தில் டுவைன் ஜான்சன் நடித்துள்ளார். பியர்ஸ் ப்ரோஸ்னன், ஆல்டிஸ் ஹாட்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பியூ ஃபிளின், டுவைன் ஜான்சன் உள்ளிட்ட நான்கு பேர் தயாரிக்கும் இப்படத்தை ஜாம் கோலெட்-செர்ரா இயக்குகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

 

இந்நிலையில் 'ப்ளாக் ஆடம்' படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி யூ-ட்யூப் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.     

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிசி நிறுவனத்தின் ஆடியோ நாடகம்; குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

shruti haasan is in the part of dc in the sandman act 3

 

பிரபல ஹாலிவுட் நிறுவனமான டிசி நிறுவனம், நாவல்களை நாடகங்களாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'தி சான்ட்மேன்: ஆக்ட்' உலக அளவில் பலரது கவனத்தை பெற்றது. இப்போது இந்த நாடகத்தின் மூன்றாம் பாகம் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' உருவாகிறது. இந்த தொடரில் ஜேம்ஸ் மெக்அவோய், கேட் இன்னிங்ஸ்,  மிரியம் மார்க்கோய்ல்ஸ் மற்றும் ஜஸ்டின் விவியன் பாண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில் பிரபல டிசி நிறுவனம் தயாரிக்கும் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' ஆடியோ நாடகத்தில் ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், " இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

 

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'என் பி கே 107' எனும் படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'சிரு 154' எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

‘வொண்டர் வுமன் 1984’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு! 

Published on 12/09/2020 | Edited on 12/09/2020
wonder woman

 

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் வெளியாக இருந்த புதிய படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வரிசையில் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு, திரையரங்கம் திறக்கப்பட்ட நாடுகளில் டெனட் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், டிசி காமிக்ஸின் 'வொண்டர் வுமன் 1984' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகுவதாக இருந்தது. அதன்பின் இரண்டு முறை ரிலீஸ் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.

 

இதுகுறித்து வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டோபி எம்மரிச் கூறுகையில், “பேட்டி ஜென்கின்ஸ் ஒரு அபாரமான இயக்குனர். 'வொண்டர் வுமன் 1984' மூலம் உலகம் முழுக்க உள்ள அனைத்து வயதையும் சார்ந்த திரைப்பட விரும்பிகளும் ரசிக்கும் ஒரு அற்புதமான படைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இப்படம் குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.