Advertisment

அடுத்த குழந்தை ஆன் தி வே... மகிழ்ச்சி ட்வீட் போட்ட இயக்குனர் மனைவி! 

selvaraghavan

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் அண்மையில் சானி காகிதம் என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார். ராக்கி பட இயக்குனர் அருண் மகேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அனுமதி வழங்கப்பட்டவுடன் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த லாக்டவுன் சமயத்தில் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் செல்வராகவனும் மிகவும் ஆக்டிவ்வாக செயல்படுகிறார்.

Advertisment

அண்மையில்கூட அவரது மனைவி மார்ஃப் செய்த வீடியோவை வெளியிட்டிருந்தார் செல்வராகவன். இயக்குனர் செல்வராகவனுக்கு லீலாவதி, ஓம்கர் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி கீதாஞ்சலி, மூன்றாவது குழந்தை பிறக்க போகிறார்என்று கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்துடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe